ஓவியம், தன்னைக் கண்டடைதல்
https://unifiedwisdom.guru/203921 டியர் ஜெ சார் , முதலில் இரு ஆசிரியருக்கும் நன்றியும் வணக்கமும் . சென்ற வாரம் ஓவிய பயிற்சி முகாமில் சேர்ந்தேன் . எனது முதல் ஓவிய பயிற்சி வகுப்பு என்பதால் மணி அண்ணா அனுப்பிய தேவையான மெட்டீரியல்ஸ் எல்லாம் தேடித் தேடி வாங்கிவிட்டேன் . நான் எங்கேயும் இவ்வளவு விரைவாக கிளம்பியதே இல்லை . வியாழன் காலையில் இருந்தே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டேன் . டவுன்லோடு செய்த ஆப்ஸ் , மெட்டீரியல்ஸ் , போன் மற்றும் டேப் – இல் சார்ஜ் ஏத்தி வியாழன் மதியமே தயாராகிவிட்டேன் . அன்று இரவு இங்கு ஈரோட்டில் சரியான கோடை மழை . தூங்க மனதே இல்லை . ஆனால் என் உள்ளம் தூங்கு அப்பதான் நாளைக்கு வகுப்பை கவனிக்க முடியும் என்று ஆறு மணிநேரம் தூங்கினேன் . வெள்ளிமலைக்கு போகும் வழியில் தாமரை பூக்கள் வருக வருக என்று அழைத்தது போல இருந்தது . புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினால் வழியில் எக்கச்சக்கமான பலாப்பழம் , பச்சை பூக்கள் கொத்துகொத்தாக இருப்பது போல இருந்தது . வெள்ளிமலை வருவதற்குள் பாரி கீதா மேம்...